பிரதான செய்திகள்

வடக்கு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

வட மாகாண கல்வி அமைச்சினால் பணித் தடை விதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கோரி இன்று போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம் மாகாண கல்வி அமைச்சின் முன்பாக இன்று திங்கட்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கஸ்டப் பிரதேசங்களில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய ஆசிரியர்கள் கடந்த மாதம் இடமாற்றம் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரனுடனான தகராறின் பின்னர், 3 ஆசிரியர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு பணித்தடை விதிக்கப்பட்டது.

குறித்த பணித்தடையினை நீக்க கோரியும், வடமாகாண கல்வி அமைச்சினால் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வடமாகாண ஆசிரியர்கள் இணைந்து இன்றைய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

Related posts

5லச்சம் மெட்ரிக் தொன் இறக்குமதி! அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைப்பு அமைச்சர் றிஷாட்

wpengine

5500 பட்டதாரிகளுக்கு விரைவில் ஆசிரிய நியமனம்!

Editor

“காதி நீதிமன்றங்களும், அவற்றுக்கெதிரான காழ்ப்புணர்ச்சிகளும்”

wpengine