பிரதான செய்திகள்

வடக்கு அபிவிருத்திக்கு தடையான முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் நடைபெற்ற வடமாகாண முதலீட்டாளர் சம்மேளன அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொள்ளாமல் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் புறக்கணித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ள நிலையிலும் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.

இந்த நிலையில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து செயற்படுகின்றதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன், குறித்த முதலீட்டாளர்கள் சம்மேளனம் அமைப்பது குறித்து உரிய நிபுணர்களுடன் கலந்துரையாடாது அமைத்துள்ளதாகவும், அதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட ஏனைய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடாமல் முதலீட்டாளர்கள் சம்மேளனம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வடமாகாண முதலீட்டாளர் சம்மேளன அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

குறித்த முதலீட்டாளர் சம்மேளன அங்குரார்பண நிகழ்வு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் எஸ்.சிவமோகன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் உட்பட வடமாகாண சபை உறுப்பினர்கள் பரம்சோதி, சயந்தன், சர்வேஸ்வரன், சிவயோகன், ஆகியோர்கள் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்வி நிருவாக சேவைக்கு 306 பேர் தெரிவு! தமிழர் 90, முஸ்லிம்கள்-29

wpengine

மன்னார் மறைமாவட்ட பேராயரை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் றிஷாட்

wpengine

“இஷாலினியின் மரணம்; நடந்தது என்ன?”

wpengine