பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் பால் உற்பத்தியை அதிகரிக்க 3.5 மில்லியன்! சதொச ஊடாக பொருற்கள்

வடக்கு மாகாணத்தில் பணியாளர்களின் பால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ஒரு கால்நடை அலுவலகத்திற்கு சுமார் 3.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

,இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பால் உற்பத்தியில் வடக்கு மாகாணம் காத்திரமான இடத்தை வகிக்கின்ற நிலையில் அதனை மேலும் விருத்தி செய்யும் நோக்குடன் மத்திய அரசினால் சுமார் 90 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள 34 கால்நடை வைத்திய அதிகாரி பணிமனைகளை உள்ளடக்கி குறித்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

வடக்கில் சதோச விற்பனை நிலையத்தின் ஏற்பாடுகளை அதிகரிப்பதற்காக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது.

ஆகவே மாகாணம் முழுவதும் அத்தியாவசியப் பொருட்களை சதோச விலையில் பெறக்கூடிய வகையில் விநியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கச்சதீவு புத்தர் சிலை விவகாரம் முற்றுப்புள்ளி; புத்தர் சிலையும் அகற்றப்பட்டது!

Editor

சுவையான தேங்காய் சம்பலை சிறையிலேயே சாப்பிடுகின்றேன் ராஜித

wpengine

சமூக வலைத்தளங்களில் Faceapp Challenge பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

wpengine