பிரதான செய்திகள்

வடக்கில் அசாதாரண காலநிலை

வளிமண்டல தாழமுக்கம் காரணமாக வட மாகாணத்தில் கன மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாண மாவட்டத்தின் கடந்த 05 நாட்களாக பெய்து வரும் மழையினால் தற்போது 57.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் அதிகமான மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்ட இடமாக தீவகப்பகுதி காணப்படுவதுடன், அங்குள்ள மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இதுவரையும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டாம் இடைநிலைப் பருவப்பெயர்ச்சி காலநிலையாலேயே தற்போது மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது.

இதனால் மழைவீழ்ச்சி தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

உப தவிசாளர் பதவியை இராஜினாமா செய்யவுள்ள யூ.எல்.அஹமட் லெப்பை

wpengine

மன்னாரில் தமிழ் கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்

wpengine

ஃபிரைட் ரைஸ், கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் குறைப்பு!

Editor