பிரதான செய்திகள்

வட,கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் வெள்ளிவரை

வட மாகாணம், கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செலயகம் அறிவித்துள்ளது.


எனினும் இந்தப் பகுதியில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு, வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்படும் என செயலகம் அறிவித்துள்ளது.


கொழும்பு, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்த ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.


ஏனைய மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் 26ஆம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்படும். பின்னர் அன்றைய தினம் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.


இந்த காலப்பகுதியில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான பயணங்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இடங்களுக்கு இடம் கொண்டு செல்வது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.


ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எந்த மாவட்டமாக இருந்தாலும் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுபல சேனாவின் முக்கியஸ்தரை பதவி நீக்க வேண்டும்! வட்டரக்க

wpengine

65 ஆயிரம் விட்டு திட்டம் பிரான்ஸ் நிறுவனத்திடம் – அமைச்சர் டி எம் சுவாமிநாதன்

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor