உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

வடகொரியாவின் எவுகனைக்கு பயந்து ஜப்பானிடம் ஒடிய டிரம்ப்

வடகொரியா கடந்த வெள்ளிக்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணையால் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்க நகரங்களையும் தாக்க முடியும். ஏற்கனவே இதேபோன்ற ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி இருந்ததால் 2-வது சோதனையால் அமெரிக்கா கடும் அதிர்ச்சி அடைந்தது.

இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை நேற்று டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இரு தலைவர்களும், வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா மற்றும் அருகாமையிலும், வெகு தொலைவிலும் உள்ள நாடுகளுக்கு நேரடியாக விடுத்த பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டனர்.

மேலும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை அதிகரிப்பதுடன், தூதரக ரீதியான அழுத்தத்தை கொடுக்கவேண்டும் எனவும், இதே நிலைப்பாட்டை மற்ற நாடுகளும் எடுக்க வலியுறுத்துவது என்றும் இருவரும் உறுதி கொண்டனர்.

தென்கொரியாவையும், ஜப்பானையும் தாக்குவதற்கு யாராவது முயற்சித்தால், இந்த இரு நாடுகளையும் பாதுகாக்க தனது முழு ராணுவ பலத்தையும் அமெரிக்கா அளிக்கும் என்றும் அப்போது ஷின்ஜோ அபேயிடம் டிரம்ப் உறுதி கூறினார்.

Related posts

தமிழ், முஸ்லிம் மக்களிடம் நாம் கையேந்தவில்லை! ஆதரவை வேண்டி நிற்க நாம் தயாரில்லை.

wpengine

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி!

Editor

பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு! வீட்டை எட்டிப் பார்த்த போது துர்நாற்றம் வீசியது.

wpengine