பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வட மாகாணத்தில் உள்ள அரசாங்க அதிபர்களுக்கு இடமாற்றம்.

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட அரச அதிபர்களும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.


நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் இந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரியவருகின்றது.


வடக்கு மாகாணத்தின் இரு மாவட்டங்களின் அரச அதிபர்கள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிங்களவர்.


இந்நிலையில், எஞ்சிய மூன்று மூன்று மாவட்ட அரச அதிபர்களையும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் இடமாற்றம் செய்வதற்கு அமைச்சரவைப் பத்திரம் நேற்று வழங்கப்பட்டு அதற்கு அனுமதியும் கொடுக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பைச் சேர்ந்த மகேஸ் யாழ்ப்பாண மாவட்டத்துக்கும், மட்டக்களப்பைச் சேர்ந்த அமலநாதன் முல்லைத்தீவு மாவட்டத்துக்கும், வவுனியாவைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் மன்னார் மாவட்டத்துக்கும் மாற்றப்படவுள்ளனர்.


மன்னார் மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபருக்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரையிலேயே சேவைக்காலம்.
அதற்குள் அவரை மாற்ற வேண்டாம் என்று நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்த போதிலும் அது நிராகரிக்கப்பட்டது.


அதேநேரம் எதிர்வரும் மே மாதத்துடன் சேவை நிறைவுறும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸால் நேற்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தவில்லை.

Related posts

ஸ்ரான்லி டிமெல் முயற்சியினால் யுத்ததினால் உடமைகளை இழந்தோருக்கு இழப்பீடு

wpengine

இரு துருவங்களாக்கப்படும் ஹக்கீமும் ஹசன் அலியும்

wpengine

சவூதியின் தலைநகர் மீது திடீர் ஏவுகணை தாக்குதல்

wpengine