பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வட மாகாண பாராளுமன்ற உறுப்பினரின் மகன் மீது தாக்குதல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது, இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குள் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த எண்மர், அவரது மகனின் மீது தாக்குதளை மேற்கொண்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளுக்கும் சேதம் விளைவித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts

65 ஆயிரம் வீட்டுத் திட்ட பயனாளர்களின் பெயர் விபரங்கள் இணையத்தளத்தில் பகிர்வு

wpengine

மைத்திரியின் வீடு ,செயலகம் முற்றுகை

wpengine

பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி அலுவலகத்தை திறந்து வைக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் இன்று!

Editor