பிரதான செய்திகள்

வட மாகாண சபையின் முன்னால் ஆளுநர் மீது தாக்குதல்

பாணந்துறைக்கு சென்றிருந்த வட மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு மக்களினால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பொது மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது இரண்டு தரப்பிற்கு இடையில் இடையில் ஏற்பட்ட மோதலில் ரெஜினோல்ட் குரே மீது கொடூரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் ஆளுநர் சென்று கொண்டிருந்த வீதியை மறித்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு சென்ற ரெஜினோல்ட் குரேவை பொது மக்கள் சுற்றி வளைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் பொலிஸார் தலையிட்டு இரண்டு பிரிவுகளையும் கலைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

இலங்கையை ஸ்திரமான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் விரைவில் கொண்டு செல்ல நடவடிக்கை

wpengine

ஜனாநாயக முன்னணி கட்சி! பிரதி தலைவரின் 50 வருட கால அரசியல்.

wpengine

கோட்டா என்னை அழைத்தால் சீனி, கலாசார நிலையம் முறைகேடுகளை கூறுவேன் ஆனால் என்னை அழைக்கமாட்டார்.

wpengine