பிரதான செய்திகள்

வட மாகாண சபை பாடசாலையில் சரியான அபிவிருத்திகளை முன்னெடுக்கவில்லை

வடமாகாண சபை கடந்த ஐந்து ஆண்டுகளாக பாடசாலைகளில் சரியான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நிதிகள் மீண்டும் திறைச்சேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முல்லைத்தீவு – விஸ்வமடு மகா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“வடக்கு மாகாண சபை கடந்த ஐந்து ஆண்டுகளாக இருந்தும் பாடசாலைகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

வடக்கு மாகாணத்துக்கு நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் சரியான முறையில் கட்டிடங்கள் அமைக்கப்படவில்லை. மைதானங்கள் புனரமைக்கப்படவில்லை, மாணவர்களின் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

இதனால் நிதிகள் மீண்டும் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. வடக்கில் இருந்த உறுப்பினர்கள் அதனை சரியான முறையில் கையாளவில்லை என்றும் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கடந்த ஐந்து வருடங்களாக வடமாகாண சபை செயற்பட்டு வந்த நிலையில், வடமாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

எனினும், இதற்கு வடமாகாண அவைத்தலைவர் உள்ளிட்ட பலரும் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை WhatApp பாவனையாளருக்கு வந்த சோதனை

wpengine

கொரோனா கடவுள் தந்த ஒரு வரம் டிரம்ப்

wpengine

ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு! மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

wpengine