வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சி. சிவபாக்கியம். இவரது கணவர் நடக்கமுடியாமலும், கண் பார்வையற்றவராகவும் உள்ளார். அவருடைய இரண்டு பெண் பிள்ளைகளும் மாணவர்களாக உள்ளனர்.
இவர் சிதம்பரபுரம் வைத்தியசாலை முன்பாக சிறிய பெட்டிக்கடை வியாபாரம் செய்து குடும்பத்தை பேணி வருகிறார். தனது வியாபாரத்தை விரிவாக்கும் நோக்குடன் புளொட் அமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மூலம் உதவி கோரியிருந்தார்.
இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட புளொட் அமைப்பின் லண்டன் கிளை உறுப்பினர் திரு. த. சிவபாலன் அவர்கள் ரூ 20000/- ஐ நன்கொடையாக வழங்கியுள்ளார்.