பிரதான செய்திகள்

வட மாகாண அமைச்சரை தேடி தெரியும் பயங்கரவாதப் பிரிவு

பரமேஸ்வரன் என பெயர் குறிப்பிட்டு வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடைச்சட்டத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பயங்கரவாத தடைச்சட்ட அலுவலகத்தில் இருந்து வருவதாக தெரிவித்து இருவர் வடமாகாண கல்வி அமைச்சரின் வீட்டிற்கு சென்று முகவரி மற்றும் அனுப்பியவர்கள் யார், என்ன விடயத்திற்கான விசாரணைகள் என குறிப்பிடாது சிறு துண்டில் எழுதிக் கொடுத்துள்ளனர்.

இதன்போது, வாய் வார்த்தையாக எதிர்வரும் 5ஆம் திகதி தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும், விசாரணை ஒன்று செய்ய வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர்.

உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் இன்றி வடமாகாண அமைச்சரை விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அன்றைய தினத்தில் வர முடியாதென்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும், உத்தியோகபூர்வமான அறிவித்தல்களுடன் வருமாறும் பயங்கரவாத தடைச்சட்ட அலுவலகத்தில் இருந்து அமைச்சரின் வீட்டிற்கு சென்ற இரு அலுவலகர்களிடமும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அகதிகள் படும் கஷ்டங்களை தீர்த்து வைப்பது தொடர்பில் யாப்பா – அமைச்சர் றிசாத் பேச்சு

wpengine

கண்ணில் மண்ணை தூவிவிட்டு தேவையானதை அரசு செய்கின்றது.

wpengine

வவுனியா பொது வைத்தியசாலையின் அசமந்த போக்கு! ஒருவர்உயிரிழப்பு

wpengine