பிரதான செய்திகள்

வட ,கிழக்கு அபிவிருத்திற்கு உதவ உள்ள சீனாவின் அரச நிறுவனம் -ஹிஸ்புல்லாஹ்

யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கும், பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கும் அப்பகுதிகளில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள சீனா அரச நிறுவனமான சீ.எஸ்.ஆர். இணக்கம் தெரிவித்துள்ளது.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும்  சீ.எஸ்.ஆர். நிறுவனத்தின் பிரதித்தலைவர் தலைமையிலான பணிப்பாளர் சபை குழுவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இன்று புதன்கிழமை இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது.

இலங்கையின் அபிவிருத்திக்கு பல்வேறுபட்ட முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாகவும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாயம் மற்றும் மின்சார துறைகளை முன்னேற்றுவதற்காக பாரிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாகவும்  இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.unnamed-6

Related posts

தலைமன்னார் பகுதியில் மூன்று மீனவர்கள் காணவில்லை

wpengine

எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்க ஆளும் கட்சி தீவிர முயட்சி .

Maash

ஊடகங்களுக்கு ஜனாதிபதியின் அன்பான வேண்டுகோள்

wpengine