பிரதான செய்திகள்

வசீம் தாஜூடீன் மரணம்! பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு

ரக்பி வீர்ர் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பிற்கான பிரதி பொலிஸ்மா அதிபர், அமரசிறி சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

நாராஹேன்பிட்டி பகுதியில் வசீம் தாஜூடீன் உயிரிழந்த சந்தர்ப்பத்தில், அதனை விபத்தினால் ஏற்பட்ட மரணம் என அப்போது பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

தாஜூடீன் மரணம் தொடர்பில் நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

27ஆம் திகதிவரை விடுமுறைக் காலப் பகுதி அல்ல

wpengine

ஆப்பிரிக்காவில் பயங்கரவாத தாக்குதலில் 33 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

Editor

சமுர்த்தி உத்தியோகத்தருக்கு நடந்த அணியாயம்

wpengine