பிரதான செய்திகள்

வசீம் தாஜூடின் கொலை! ஷிராந்தி,யோசித விசாரணை

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச மற்றும் அவரது மகன் யோசித ராஜபக்ச ஆகியோரிடம் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளுக்காக ஷிராந்தி ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோருக்கு, நாளை புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தாஜூடின் கொலை தொடர்பில் விசாரணை நடத்தி வரும் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு அறிவித்துள்ளனர்.

தாஜூடின் கொலை தொடர்பில் வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக தம்மையும் மகன் யோசிதவையும் புலனாய்வுப் பிரிவினர் நாளை அழைத்துள்ளனர் என சிராந்தி ராஜபக்ச கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 5653 ஏக்கர் பெரும் போக நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு

wpengine

வடக்கில் தேசிய கொடியை இறக்கிவிட்டு, கறுப்புக்கொடி என்பது தெற்கு மக்களின் உணர்வை தூண்டுவதாகும்.

Maash

டெனிஸ்வரனுக்கும் ஜப்பானிய தூதுவருக்குமிடையில் விசேட சந்திப்பு

wpengine