பிரதான செய்திகள்

வசீம் தாஜுதீன் படுகொலை! இன்னுமொரு பொலிஸ் அதிகாரிக்கு விசாரணை

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் இன்னுமொரு பொலிஸ் அதிகாரிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வசீம் தாஜுதீன் படுகொலைச் சம்பவத்தின் பின்னர் குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் பணிப்பாளராக இருந்த டீ.எல்.ஆர் ரணவீரவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

எனினும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவின் பணிப்புரையின் பேரில் குறித்த படுகொலைச் சம்பவத்தை மூடி மறைப்பதில் ரணவீரவும் துணை செய்திருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருக்கும் டீ.எல். ஆர். ரணவீரவிடம் இது தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

அத்துடன் வசீம் தாஜுதீன் படுகொலைச் சம்பவத்தின் பின்னர் ரணவீரவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான பதிவுகளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் விரைவில் இவரும் கைது செய்யப்படலாம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கஞ்சிபான இம்ரானிடம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

wpengine

சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் யாழ்ப்பாணத்தில்

wpengine

வீதியில், இறங்கி மக்களை அழைத்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தால் வானத்தில் இருந்து டொலர் கொட்டாது.

wpengine