பிரதான செய்திகள்

வசந்தம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் இர்பான் வைத்தியசாலையில்

வசந்தம் தொலைக்காட்சி செய்திப் பிரிவின் முகாமையாளரும் சிரேஷ்ட அறிவிப்பாளருமான இர்பான் மொஹமட் அவரது மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் விபத்தில் சிக்கி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை மிகுந்த வேதனையுடன் இங்கு பதிவிடுகிறேன்.

திருமண நிகழ்வு ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த போதே அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

உடனடியாக தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான போதிய சிகிச்சைகளை வழங்க குறித்த வைத்தியசாலையில் வசதிகள் இன்மையால் அவர்களைக் கொழும்புக்கு மாற்ற வேண்டியுள்ளதாகத் தெரிய வருகிறது.

இதனையடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம் அமீன் அவர்கள் தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுள்ளார்.

அதேவேளை, சுகாதார அமைச்சர் ராஜித சேனா ரத்னவுடனும் தொடர்பு கொண்டு சம்பவத்தை விளக்கியுள்ளார். இதனையடுத்து காயமடைந்த மூவரையும் கொழும்புக்கு கொண்டு செல்ல உடனடி ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

காயமடைந்த மூவரும் பூரண சுகம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திப்போமாக!

Related posts

பொது தேர்தல் பற்றி றிஷாட் மற்றும் ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தை

wpengine

ஊடகங்களுக்கு ஜனாதிபதியின் அன்பான வேண்டுகோள்

wpengine

முஸ்லிம்களின் திருமண சட்டத்தில் கைவைக்கும் ரணில்

wpengine