பிரதான செய்திகள்

வங்குரோத்துவாதிகள் றிஷாட்டை பழி தீர்க்க அரசியல்வாதிகளின் முகவர் குவைதீர்கான்

(தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா)

சத்தியம் வென்றே தீரும் அசத்தியம் அழிந்தே போகும் என்ற அமுதவாக்கு அல்லாஹ்வின் அருளினால் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குவைதர்கான் என்பவரினால் பரவ விடப்பட்ட அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் இன்று அவர் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு முறைப்பாடு செய்யப் போவதாகவும்,இது தொடர்பில் அனைவரையும் அங்கு வருமாறு விடுத்த வேண்டுகோளினையும் கண்ட எனது உள்ளத்தில் எழுந்த கருத்துக்களை பதிவேற்றம் செய்திருந்தேன்.

அதனது தொடராக இந்த குவைதர்கானின் சமூக விரோத செயல்களை சமூக மயப்படுத்துவதன் மூலம் சத்தியம் வெற்றிபெற்றுள்ளதை ஆணித்தரமாக உறுதிப்படுத்த முடியும் என நம்பிக்கை கொண்டவனாக சில கருத்துக்களை முன் வைக்கவிரும்புகின்றேன்.

இந்த நாட்டு அரசியலில் சிலருக்கு சிறந்த அந்தஸ்த்துக்கள் மக்களினால் வழங்கப்படுவதை அவதானித்துள்ளோம்.அந்த வரிசையில் இலங்கை அரசியலில் புடம் போட்டு சரித்திர வரலாற்று பதிவாகக்கொண்டுள்ளவராகத் தான் இன்றைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களை அடையாளப்படுத்த முடியும்.இவ்வாறான ஒருவருக்கெதிராக எவ்வித அடிப்படை காரணங்களும் இன்றி எவரதோ தாளத்திற்கு ஆட்டம் போடும் மண் குதிரைகள் புறப்பட்டுள்ளது.இவர்களது இந்த பயணங்கள் ஒரு போதும் நீடித்து நிலைக்க்க்கூடியதொன்று அல்ல என்பதை இன்றைய சம்பவம் காட்டுகின்றது.

வடக்கு மக்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் தமது பணிகளை எல்லருக்கும் வழங்கி அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் அணி என்பது பணத்துக்கு சேர்ந்த்து அல்ல என்பதை போதுமான அடையாளங்களுடன் வெளிப்படுத்த முடியும்.இருந்த போதும் ஒரு தனிமனிதனது தேவைகளுக்காக மட்டும் (வெள்ளவத்தையில் வீடொன்றும்,ஒரு வாகனமும் கொடுக்கப்பட்டதற்காக ) முஸ்லிம் சமூகத்திற்கு தம்மை அர்ப்பணம் செய்து மனித நேயம் கொண்ட ஒரு மனிதரை இழிவுபடுத்தவும்,அவரை அரசியல் ரீதியில் பழிவாங்கும் பிற்போக்குத்தனமான முறையில் செயற்படும் வங்குரோத்து அரசியல்வாதிகளின் முகவர்களாக இந்த குவைதர்கான் மீண்டும் வேஷமனிந்து நடுவீதியில் வளம் வர ஆரம்பித்துள்ளார்.பொய்கைகளயும்,பிதட்டல்களையும் பொட்டலங்களாக்கட்டி தேர்தல் காலம் வந்துவிட்டால் பொட்டனி வியாபாரிகளாக முஸ்லிம் பிரதேசங்களுக்கு வரும் முஸ்லிம் கட்சியொன்றினை போல இவரது கையிலும் பச்சை,நீளம்,மஞ்ச நிற பைல்களை இன்று காணமுடிந்த்து.அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக புதிய முறைப்பாடுகளை செய்ய வந்த இந்த ஆசாமியின் ஆடையினை பார்த்த போது சிரிப்பு சிரிப்பாக வந்தது.சட்டத்துறையில் முதுமாணி பெற்று சுமக்க முடியாத பைல்களை சுமந்து வந்தவர்போல் இந்த ஆசாமியின் கோலம் இருந்தது.மன்னாரில் இவர் செய்த திருகுதாலங்களும்,அபசரிப்புக்களும் ஏராளம்.

அப்பாவி தமிழ் மக்களிடமிருந்து அபகரித்தவைகள் தொடர்பில் மன்னார் மூர் வீதியில் மக்கள் பேசும் குரல் ஒலித்து கொண்டே இருக்கின்றது.கறைபடிந்த கைகள்,மக்களுக்கு வஞ்சித்தும் கொடுக்காத உள்ளம்என்பன இவரது அணிகளன்களாகும்.இப்படிப்பட்ட சோகை கொண்டவன்,சகல சமூகத்தின் துயரினையும்,தமக்கு கிடைத்த அரசியல் காலத்திற்குள் துடைப்பதற்கு புரப்பட்ட அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக முறையிட வருகின்றான் என்றால்,இவனை விட அநியாயக்காரன் இந்த சமூகத்தில் எவனும் இருக்க மாட்டான்.

பொய்யான முறைப்பாடுகளை செய்யயும் குவைதரின் இந்த இன்றைய முயற்சி தோற்றுப் போனது,ஏன் என்று பார்த்த போது அவர் ஏற்கனவே கட்டிக்கொடுத்த பைல்களுக்குள் புழுகு முட்டைகள் மட்டும் இருந்த்தை அறிந்து வைத்த்தன் விளைவாகவே இவைகள் புற முதுகு காட்டி ஓட ஆரம்பித்துவிட்டது.என்பது தான் யதார்த்தம்,சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் புறையோடிப் போயிருக்கின்ற நிலையில் இதற்கு பரிகாரம் காண வேண்டும் என்ற வேட்கையுடனும்,வேகத்துடனும் செயற்படும் மனித உணர்வுகளை உணர்ந்து கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் போன்ற மக்கள் சேவகனுக்குஎதிராக புழுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு அதில சுவைப்பால் பருகும்,கானும்,அவரை இயக்கும் வங்குரோத்து அரசியல் தலைமைகளும் இனியும் திருந்த மாட்டார்கள்.அவர்கள் சிறந்த நடிகர்கள்என்பதை மக்கள் புரியும் நேரம் நெருங்கிவிட்டது.

Related posts

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து சர்வதேசத்துக்கு அலி சப்ரி விளக்கம்!

Editor

குவன்தனாமோ சித்திரவதை முகாமிலிருந்து கைதிகள் வெளியேற்றம்

wpengine

தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸார்,ஆயுதப்படைகளுக்கு அதிகாரம்

wpengine