சமூக வலைத்தளங்கள் மூலமாக சட்டவிரோத ஆயுதங்களை விற்கும் பெரும் இணைய சந்தை ஒன்று லிபியாவில் இயங்கிவருகின்றது.
அறிக்கை ஒன்றில்,18 மாதங்களில் ஆயிரத்து முந்நூறுக்கும் அதிகமான ஆயுத வியாபாரங்கள் நடந்துள்ளதாக ஆர்மமென்ட் ரீஸேர்ச் சர்விஸஸ் (Armament Research Services) என்ற நிறுவனத்தின் ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.