பிரதான செய்திகள்

லலித்,அனூஷவை காப்பாற்ற பிச்சை எடுக்கும் பௌத்த தேரர்கள்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிதி சேகரிக்கும் பிக்குமாரின் செயற்பாட்டை தடுத்து நிறுத்த மகாநாயக்கர்கள் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகங்கள் வாயிலாக இந்த வேண்டுகோளை மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்கர்களிடம் முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள லலித் வீரதுங்க மற்றும் அனூஷ பெல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை செலுத்துவதற்காக பௌத்த தேரர்கள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிதி சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள தேரர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த மஹிந்த அரசாங்கத்தில் பல்வேறு வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டவர்களாகும். அவ்வாறானவர்கள் பௌத்த சாசனத்துக்கே பெரும் இழுக்கைத் தேடித் தரும் வகையில் நடந்து கொள்ளத் தலைப்பட்டுள்ளனர்.

எனவே பௌத்த தேரர்களின் இவ்வாறான அவமானகரமான நடவடிக்கைகளை மகாநாயக்கர்கள் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

ரவி கருணாநாயக்க பொது பல சேனாவுக்கு பணம் வழங்கியது ஏன்?

wpengine

எரிபொருள் பிரச்சினை! பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெயர் பலகை நீக்கம்

wpengine

15,000 க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்க முடியாத சூழ்நிலை..!

Maash