உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

லண்டன் தாக்குதல்: அறுவர் பலி, இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

லண்டனின் இருவேறு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 3 தீவிரவாதிகள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

லண்டன் பாலத்தின் மீது பாதசாரிகள் மீது வேன் ஏற்றியும், போரக் சந்தைப் பகுதியில் கத்தியால் குத்தியும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் லண்டன் முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசர ஆலோசனை கூட்டத்திற்கும் அந்நாட்டு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, லண்டனில் இடம்பெற்ற தாக்குதல்களால் இலங்கை வீரர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சம்பியன் ட்ராபி தொடருக்கான அந்த நாட்டுக்கு சென்றுள்ள அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், லண்டனிலுள்ள இலங்கையர்கள் இவரும் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல் வௌியாகவில்லை என, வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

Related posts

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில்! மன்னார் தவிசாளரை பேசவிடாமல் தடுத்த காதர் மஸ்தான் பா.உ

wpengine

அரசாங்கம் பதவி விலக வேண்டும், இவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது

wpengine

கொரோனா வைரசை பசுவின் கோமியம் கட்டுப்படுத்துமா?

wpengine