அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

லசந்த விக்ரமதுங்கவின் மகள், சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் ஹரிணிக்கு கோரிக்கை.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் (Harini Amarasuriya) கோரிக்கை முன்வைத்துள்ளார்.

பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அஹிம்சா விக்ரமதுங்க, தனது தந்தையின் கொலை வழக்கு விவகாரத்தில் சட்டமா அதிபர் கடமை தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறித்த கடிதத்தில், சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அஹிம்சா விக்ரமதுங்க வலியுறுத்தியுள்ளார்.

கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான விசாரணைகளின் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட மூவரை விடுவிப்பதற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்க பரிந்தரைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த தீர்மானம் தற்செயலானது அல்லவென்பது கடந்த வாரத்தில் இடம்பெற்ற விடயங்களில் தமக்கு தெளிவாக தெரிந்ததாக அஹிம்சா விக்ரமதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணைகள் தீவிரமாகவோ நம்பகத்தன்மையுடனோ இடம்பெறவில்லை.

எனவே, சட்ட மா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணையை முன்வைத்து அவரை பதவிநீக்கம் செய்வதே நீதிக்கான அரசாங்கத்தின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஒரேவழி என அவர் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம், 27ஆம் திகதி சட்ட மா அதிபரின் கையொப்பத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

குறித்த கடிதத்தில், லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்குடன் தொடர்புடைய மூவருக்கு எதிராக தொடர்ந்தும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என சட்ட மாஅதிபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதனை இழந்தாலும் கல்வியை இழக்க முடியாது,, மல்வானையில் அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

wpengine

பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 1000 ரூபா வரை உயர்வடைந்துள்ளது.

wpengine

Islamic Relief based London INGO help 1,100 families in Kolannawa, Welampitiya

wpengine