பிரதான செய்திகள்

லங்கா IOC நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை குறைத்தது!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக, லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை இன்று முதல் அமுலாகும் வரையில் குறைத்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை திருத்தத்திற்கு அமைவாக பெற்றோல் லீற்றரின் புதிய விலை 333 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலை திருத்தத்துக்கு அமைய 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 365 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 310 ரூபாவாகும்.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 

wpengine

றிஷாட் மனைவி உட்பட 4பேருக்கு! ஒகஸ்ட் 23 வரை மறியல்

wpengine

ATM பாவனையாளர்களின் கவனத்திற்கு! வெளிநாட்டு திருடர்கள்

wpengine