பிரதான செய்திகள்

றிஸ்வி நகர் வீட்டுத்திட்ட பணிகளுக்கு ஹிரா பௌண்டேஷன் 40 இலட்சம் ரூபா நிதி

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின்; “செமட செவன” வீட்டுத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி, றிஸ்வி நகரில் 16 வீடுகளைக் கொண்ட மாதிரி கிராமம் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வீட்டுத் திட்டத்தை பூரணப்படுத்த ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் 40 இலட்சம் ரூபாய் நிதியினை வழங்கி வைத்தது.

ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் மேற்படி நிதி வீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடையும் 16 பயனாளிகளுக்கும் தலா இரண்டரை இலட்சம் ரூபாய் வீதம் 40 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டன.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் “செமட செவன” வீட்டுத் திட்டம் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட றிஸ்வி நகரில் நிர்மாணிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவ்வீட்டுத் திட்டத்துக்கான காணியை காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனம் வழங்கியிருந்ததுடன், ஒரு வீட்டின் நிர்மாணப் பணிகளுக்காக வீடமைப்பு அமைச்சினால் சுமார் 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. எனினும், மேற்படி  நிதி மூலம் வீட்டுத் திட்டத்தை பரிபூரணப்படுத்த முடியாததால் வீட்டு;த்திட்ட பயனாளிகள் இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
அதனை அடுத்து, ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் ஒரு பயனாளிக்கு இரண்டரை இலட்சம் ரூபா வீதம் 16 பயனாளிகளுக்கும் சுமார் 40 இலட்சம் ரூபாவினை வழங்கியது. முதல் கட்டமாக 125000 ரூபாய் வீதம் 20 இலட்சம் ரூபா வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை றிஸ்வி நகருக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வீட்டுத் திட்டத்தை பார்வையிட்டதுடன், பயனாளிகளுடன் மேலதிக தேவைகள் குறித்து கலந்துரையாடினார்.
பின்னர், இரண்டாம் கட்டமாக மேலும் 20 இலட்சம் ரூபாய் நிதியினை இதன்போது பயனாளிகளிடம் கையளி;த்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், குறித்த மாதிரி கிராமத்தின் மின்சாரம், வீதி, குடிநீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் ஊடாக செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

Related posts

அரச ஊழியர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க முயற்சிக்கிறது.

wpengine

சட்டவிரோத வாகன இறக்குமதி : சுங்க அதிகாரி உடந்தை

wpengine

ரணிலுக்கு எதிராக பேசிய ரவூப் ஹக்கீம்! இளம் வேட்பாளர் தேவை

wpengine