பிரதான செய்திகள்

றிஷாட்டை கைது செய்ய வேண்டும்! ஞானசாரவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் சிங்கள அமைச்சர் கோரிக்கை

அமைச்சர் ரிசாட் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை கைது செய்து தீவிரவாத செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை நேற்று வெலிக்கடைச் சிறைச்சாலையில் பார்வையிட்டு திரும்பிய போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனை கூறியுள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் போன்றதொரு தீவிரவாத இயக்கமொன்று ரிசாட், ஹிஸ்புல்லாஹ், முஜிபுர் ரஹ்மான், அசாத் சாலி போன்றவர்களின் உதவியின்றி இலங்கையில் செயற்பட்டிருக்க வாய்ப்பே கிடையாது.

கடந்த 2007-2008ம் ஆண்டு முதுல் ஹிஸ்புல்லாஹ் மிகவும் பலம்பொருந்திய ஒர் அரசியல்வாதியாக உருவாகியுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவே ஹிஸ்புல்லாஹ்விற்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் பலர் தங்களது அரசியல் சுய லாப நோக்கங்களுக்காக இவ்வாறு இனவாதத்தையும் மதவாதத்தையும் போசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியீட்ட வேண்டும் என்பதே ரணில் விக்ரமசிங்கவின் பிரதான இலக்கு எனவும், இதனால் தீவிரவாதம் குறித்த விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் முஸ்லிம்களின் எட்டு முதல் ஒன்பது லட்ச வாக்குகளை இழக்க நேரிடும் என்ற அச்சமும் அதிகாரப் பேரசையும் காரணமாக விசாரணைகளை உரிய முறையில் நடாத்துவதனை ரணில் தடுத்து வருகின்றார் என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்திற்கு முன்னதாகவேனும் கலகொடத்தே ஞானசார தேரரை அரசாங்கம் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Related posts

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் 2000 ரூபா- நிதி அமைச்சு

wpengine

முஸ்லிம்கள் ஹபாயா ஆடைகளை அணிவதனையும் தடை செய்ய வேண்டும்

wpengine

சோமவன்ச அமரசிங்க காலமானார்

wpengine