பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

றிஷாட்டின் கைதுக்கு எதிராக வவுனியா நகர சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்!

அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக வவுனியா நகரசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வவுனியா நகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஏ.ஆர்.எம். லரீப்
எம் .எஸ் .அப்துல் பாரி திருமதி மஞ்சுளா தேவி அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரனை சபையில் ஏகமனதாக ஏற்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வவுனியா நகர சபையின் மே மாதத்திற்கான 39ஆவது மாதாந்த சபை அமர்வு இன்று (12) காலை 9.30மணிக்கு வவுனியா நகர சபையின் கௌரவ தவிசாளர் இ .கெளதமன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஏ.ஆர்.எம்.லரீப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில்-

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அதிகாலை 2 .30 மணிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் அவர்களது கைதானது இந்த நாட்டு முஸ்லிம்களை வேதனை படுத்துகின்ற ஜனநாயக முறையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கைதாக காணப்படுகின்றது.

மேலும் இந்த ஜனநாயக நாட்டில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதாக இருந்தால் சபாநாயகருக்கு தெரியப்படுத்தி சபாநாயகர் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னரே கைது செய்யப்பட வேண்டும். மாறாக இதற்கு மாற்றமாக இந்த கைது இடம் பெற்று இருக்கின்றது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒருமுறை கைது செய்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்து எவ்வித குற்றமும் அற்றவர் என விடுதலை செய்யப்பட்டவர் எமது கட்சியின் தலைவர்
அவரை மீண்டும் இந்த குண்டு தாக்குதலுடன் தொடர்பு படுத்தி இடம் பெற்ற இந்த கைது ஒரு சிலரை திருப்திப்படுத்துவதற்கான கைதாகவே காணப்படுகின்றது.

இந்த நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து எவ்வித குற்றமும் செய்யாத எமது கட்சியின் தலைவர் கௌரவ றிசாட் பதியுதீன் அவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து ஜனனாயக முறைகளையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் அத்தோடு சிறுபான்மை சமூகத்தின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதித்து முஸ்லிம் தலைமைகளை அவர்களின் குரல்களை நசுக்கும் செயற்பாடுகளையும் கைவிட்டுவிட்டு நாட்டின் தற்போது கொரோனா 3வது அலை வீசுகின்றது அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளுமாறும் வேண்டிக்கொள்ளப்பட்டது .

Related posts

ரோசியின் மலசல கூடத்திற்கே இவ்வளவு தொகை என்றால் பிரதமரின் மலசல கூடத்திற்கு எவ்வளவு செலவாகும்

wpengine

பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் நிகழ்வு

wpengine

வவுனியாவில் திறப்பு விழா! ராஜபஷ்ச திறந்து வைத்தார் முன்னால் அமைச்சர் றிஷாட் பங்கேற்பு

wpengine