பிரதான செய்திகள்

றிஷாட்,சம்பந்தன் அரசாங்கத்திற்கு முழு ஆதரவினை வழங்குவார்கள்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளைமறுதினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு எதிர்வரும் வியாழக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்குவார்கள். என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிக் கொள்ள ஐக்கிய தேசிய கட்சி உரிய திட்டங்களை வகுத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகள் தற்போது அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும், மறுபுறம் பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் குற்றச்சாட்டுக்களில் இருந்து முழுமையாக எவ்வித விசாரணைகளுமின்றி விடுப்படுவார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு தேசிய பாதுகாப்பினை காட்டிலும் அரசாங்கத்தின் பாதுகாப்பே முக்கியமாக உள்ளது.

Related posts

லக்க்ஷபான நீர்தேக்கத்தின் வான் திறந்து! களனி ஆற்றுபகுதி மக்கள் கவனம்

wpengine

கல்முனை இரவுடன் சாய்ந்தமருதாக மாற்றம்

wpengine

தலைமன்னார் காட்டுப்பகுதியில் ஆயும்

wpengine