பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

றிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்.

ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரை விடுதலை செய்யக் கோரியும், இரண்டாவது நாளாக இன்று (29) மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமூக இடைவெளிகளை பின்பற்றி, முகக் கவசம் அணிந்து, சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக, அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த, போராட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், முசலி பிரதேச சபை தவிசாளர் சுபிஹான் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக, நேற்று வவுனியாலும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை ஏன் மைத்திரி எடுத்தார்

wpengine

கைத்தொழில்அமைச்சின் வழிகாட்டலில் 25லச்சம் தென்னை நடும் வேலைத்திட்டம்

wpengine

கோப்பாபிலவு முதல் கோப்பாவெளி வரை கையாலாகாத முஸ்லீம் அரசியல் – பாகம் 01

wpengine