பிரதான செய்திகள்

றியாஜ் பதியுத்தீன் அடிப்படை உரிமை மீறல் வழக்கு உயர் நீதிமன்றத்தில்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுத்தீன் அவருடைய சகோதரர் ரியாஜ் பதியுத்தீன் அவர்களின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று 15.07. 2021 வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் 502ம் அறையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது .

கடந்த முறை வழக்குவிசாரணையின்போது பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுத்தீன் அவர்களை வீட்டுக்காவலின் தடுத்துவைப்பதற்கான பாதுகாப்பு அமைச்சு தரப்பு விண்ணப்பம் கோரப்பட்டபோது அரச தரப்பில் அதற்கான நம்பிக்கை வழங்கப்பட்டது.

இருந்தபோது இம்முறை பாதுகாப்பு அமைச்சர் சம்மதம் அளிக்காததல் ஏற்கானவே அவர்களால் வழங்கப்பட்ட சம்மதத்தை பின்வங்குவதற்கான கருத்தை தெரிவித்ததையடுத்து அரசதரப்பு வாதங்களை தொடந்து மீண்டும் அரதரப்பு சமர்பணத்துக்காக எதிர்வரும் 28.07.2021 வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, அனில் சில்வா , சிரேஷ்ட சட்டத்தரணிகளான N M சஹீட், ருஸ்தி ஹபீப் மற்றும் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹுனைஸ்பாரூக் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி அவர்களும் ஆஜாராகினர்.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி தவராசா அவர்களின் வழிகாட்டலில் இடம் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியின் கரங்களை நாங்கள் பலப்படுத்த வேண்டும்- ஹிஸ்புல்லாஹ்

wpengine

மூத்த உறுப்பினர் அலிகான் சரீபுக்காக எனது பதவியினை ராஜினாமா செய்கின்றேன் றிப்ஹான்

wpengine

அமைச்சர் றிஷாட்டை ஒழிக்க டயஸ்போரவுடன், சில முஸ்லிம் அரசியல்வாதிகள்

wpengine