பிரதான செய்திகள்

றிசாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டமைப்பு ஆதரிக்காது

ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்காது என இரா.சம்பந்தன் வாக்குறுதியளித்துள்ளார்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அமைச்சர் ரிசாட் பதியுதீன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போதே குறித்த வாக்குறுதியை சம்பந்தன் அளித்துள்ளார்.

ரிசாட் பதியுதீனிற்கு எதிராக எதிரணியினரால் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்துள்ளது.

இதையடுத்து, தனக்கு ஆதரவு திரட்டி ரிசாட் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்துடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

இதன்படி, இரா.சம்பந்தனுடனும் தொலைபேசியில் பேசினார்.

இதன்போது, இரா.சம்பந்தன் பதிலளிக்கும்போது,
ஒரு சிறுபான்மைக் கட்சியொன்றின் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை.

கட்சிக்குள் பல்வேறு அபிப்பிராயங்கள் இருந்தாலும், நாங்கள் அந்த பிரேரணையை ஆதரிக்கப் போவதில்லை என அழுத்தம் திருத்தமாக வாக்குறுதியளித்துள்ளார்.

Related posts

கிழக்கில் அமைச்சர் றிஷாட்,ஹசன் அலி கூட்டணி

wpengine

மலசல கூடத்திற்கு பழியான மூன்று வயது அஷ்ரப் நகர் ஹிமாஸ்

wpengine

அப்படி வந்தால் ஆதரிப்போம்! இப்படி வந்தால் ஆதரிப்போம்! என்று சொல்லும் கிழக்கு உறுப்பினர்கள்

wpengine