பிரதான செய்திகள்

ரோஹிங்யா ஆர்ப்பாட்டம் இடைநடுவில் ! தௌஹீத் ஜமாத்திற்கு தடை

ரோஹிங்கிய முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கு எதிராக தவ்ஹீத் ஜமாத் மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்வதைக் கண்டித்தும், ரோஹிங்ய இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச தலையீட்டைக் கோரும் வகையிலும் இலங்கை தவ்ஹீத் சார்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்தது.

இன்று நண்பகல் ஒருமணியளவில் கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டாரத்தில் மேற்கொள்ளப்படவிருந்த குறித்த ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் கடைசி
நேரத்தில் தடைவிதித்துள்ளது.

கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் லால் ரணசிங்க இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த தடையின் பின்னணியில் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியல் அலுவலகமும் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Related posts

தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன்

wpengine

அநுரகுமார திஸாநாயக்கவுடன் மஹிந்த பேச்சுவார்த்தை

wpengine

வவுனியாவில் 20 மாடுகளுடன் மூவர் கைது .

Maash