பிரதான செய்திகள்

ரோஹிங்கிய முஸ்லிம்கள் விடயத்தில் கருணை காட்டுங்கள்

(பர்சான் அட்டாளைச்சேனை)

மியன்மாரிலிருந்து வெளியேறி தற்போது இலங்கையில் காணப்படும் ரோகிங்க முஸ்லிம் அகதிகளின் விவகாரம் தொடர்பில் நேற்று (26) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான், ரோகிங்க முஸ்லிம்களின் விடயத்தை, கருணையுடன் எதிர்கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

“அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்தில், இலங்கை கைச்சாத்திடவில்லை என்பது உண்மைதான். ஆனால், இவ்விடயத்தை, மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். முக்கியமாக, ரோகிங்க மக்கள், மியன்மாரிலிருந்து வந்திருக்கிறார்கள். இந்நாடு நேசமாக ஒரு நாடாகும். இரண்டு நாடுகளும் இணைந்து, பௌத்தத்தை முன்னேற்றுவதில் செயற்பட்டிருக்கின்றன. ஆகவே இவ்விடயம், நேர்முக விடயத்தில் பார்க்கப்படுவது அவசியமானது”

இலங்கையில் 30 வருட கால யுத்தத்தின்போது இலங்கையிலிருந்து இலட்சக்கணக்கான அகதிகள் வெளிநாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். அவர்களை அந்த நாடுகள் அகதிகளாக ஏற்றுக் கொண்டனர். அவர்களை அகதிகளாக அந்நாடுகள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களும் கடலில் மூழ்கி இறந்திருப்பார்கள்.

 

ஆனால் அந்நாடுகள் அவ்வாறு அவர்களை துரத்தவில்லை. குடியுரிமை வழங்கியுள்ளார்கள்.
அதுபோல் இலங்கையில் வந்திருக்கும் மியன்மார் அகதிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். என்று தெரிவித்தார்.

Related posts

கஜேந்திரகுமார் மக்களுக்காக பேசவில்லை, டொலர்களுக்காகவே பேசுகின்றார்

wpengine

வசீம் தாஜூடின் கொலை! ஷிராந்தி,யோசித விசாரணை

wpengine

மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி!

Editor