பிரதான செய்திகள்

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த சிறீதரன்

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் கொண்டு குவிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது மனிதப் பேரவலம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம்(21) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மியன்மாரின் அரச தலைவரான ஆங் சாங் சூகி ஆட்சியில் பாரிய பேரவலம் பூமியில் நடந்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மனிதப் பேரவலம் என்பது ரோஹிங்கியா மக்களை மிகவும் துன்புறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கியா மக்கள் மீது கொண்டுள்ள கோவம் என்ன? ஏன் அவர்கள் அந்த நாட்டின் இராணுவத்தாலும், பௌத்தர்களாலும் சிதைக்கப்படுகின்றனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம் என்பதால் ரோஹிங்கியா மக்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்ந்த இடமும் நெருப்பு வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் நாடுகடந்து பங்களாதேஷ் முதல் தமிழகம் வரையும் குடிபெயர்ந்திருப்பதை இந்திய ஊடகங்கள் கூட செய்தி வெளியிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலை மாற்றமடைய வேண்டுமாக இருந்தால் மனித நேயத்திற்காக குரல் கொடுப்பவர்கள் மனித இனத்தின் கொடூரங்களை தடுக்க கயாராக வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

Related posts

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக பாரிய கையெழுத்து வேட்டை

wpengine

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் ஆதரவாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர்

wpengine

ரணிலை பற்றி மஹிந்த வெளியிட்ட உண்மைகள்

wpengine