பிரதான செய்திகள்

ரோஹிங்கிய தாக்குதல்! சிங்கள ராவய தலைவர் கைது

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஸ்கிஸ்ஸையில் உள்ள வீடொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் ஏதிலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி, குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் மேலும் ஒரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

19 வயது யுவதியுடன் தொடர்பு வைத்த 55 வயது குடும்பஸ்தர் – ஊர்மக்களில் தாக்குதலால் உயிரிழப்பு!

Editor

ஹக்கீம் தலைமை மு.கா. கட்சியினை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துகின்றது- சேகு

wpengine

வவுனியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள கடைகளை அகற்றகோரி தமிழ் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine