பிரதான செய்திகள்

ரோஹிங்கிய அகதிகளை பொறுப்பேற்க திர்மானிக்கவில்லை -சம்பிக்க

சுமார் பத்தாயிரம் பேர் வரையான மியன்மார் – ரோஹிங்யா அகதிகளை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்கத் தீர்மானித்துள்ளதாக வௌியான செய்திகளில் உண்மையில்லை என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பதிவொன்றின் மூலமே அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கமோ அமைச்சரவையோ ரோஹிங்யா அகதிகளை பொறுப்பேற்பதாக வாக்குறுதி அல்லது எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சில காலங்களுக்கு முன்னர் கடலில் தத்தளித்த ரோஹிங்யா அகதிகள் சிலரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றினர்.

பின்னர் அவர்கள் மியன்மாருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் எனக் கூறியுள்ள சம்பிக்க, அதன் பின்னர் ரோஹிங்யா அகதிகள் எவரும் இலங்கைக்கு வரவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனாலும், நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்த சிலரால் இது குறித்து பொய்யான தகவல்கள் வௌியிடப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மன்னார்,எமில் நகர் வீட்டில் மனித எழும்புகள்

wpengine

அப்பாவி மக்களை இலக்கு வைத்து பணம் உழைக்கும்! மன்னார் நகர பிரதேச செயலக நலன்புரிச்சங்கம்! பலர் கண்டனம்

wpengine

அன்பான பெற்றோரின் கவனத்திற்கு..

wpengine