பிரதான செய்திகள்

ரோகிங்ய முஸ்லிம்கள் மீதான ஹக்கீமின் நீலிக் கண்ணீர்

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

அண்மையில் சீனாவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் ஹக்கீம் மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகியை சந்தித்து ரோகிங்ய முஸ்லிம்கள் தொடர்பில் பேசியதாக இன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் அவர் இலங்கைக்கு வந்துள்ள மியன்மார் அகதிகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் குறிப்படப்பட்டுள்ளது.இதற்கு அவர் என்ன கூறினார் என்ற விடயம் கூறப்படவில்லை.இதுவே இது ஒரு பொய்யான கூற்றின் சாயலை காட்டுவதை அறிந்துகொள்ளச் செய்கிறது.அங்கு இதுவெல்லாம் பேச அமைச்சர் ஹக்கீமுக்கு சந்தர்ப்பம் அமைந்திருக்காது என்பதே உண்மையாகும்.மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகியிற்கு தமிழ் மொழி தெரியாதல்லவா?

இவர் அங்கு மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகியை சந்தித்து கலந்துரையாடிய வேளையில் இலங்கையில் இனவாதிகளின் கை ஓங்கி இருந்தது.அச் சந்தர்ப்பத்தில்  “இலங்கை நாட்டின் பிரதமருடன் சுத்தித் திரியும் நீங்கள் முதலில் உங்கள் நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துவிட்டு என்னுடன் வந்து கதையுங்கள்” என்றால் அமைச்சர் ஹக்கீம் என்ன பதில் அளித்திருக்க முடியும்?

குறித்த சந்திப்பில் மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகி அமைச்சர் ஹக்கீமை மியன்மார் வந்து,நிலைமைகளை நேரில் அவதானித்து  ஆலோசனை வழங்குமாறு கூறியுள்ளார்.இது ரோகிங்ய முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க அமைச்சர் ஹக்கீமுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம்.எப்போது அமைச்சர் ஹக்கீம் மியன்மார் செல்வார் என்பதை அறிவிப்பாரா? அமைச்சர் ஹக்கீம் இக் காலத்தில் மியன்மார் செல்ல மாட்டார் என்பதை உறுதிபட கூறுகிறேன்.அமைச்சர் ஹக்கீம் மியன்மார் செல்லாது போனால் அவர் முஸ்லிம்கள் மீது அக்கறை அற்றவராக இருக்க வேண்டும்  அல்லது பொய்யான ஒன்றை கூறி பிரபலம் தேடும் முயற்சியாக இருக்க வேண்டும்.

மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பில் மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகியை சந்தித்து பேசிய அமைச்சர் ஹக்கீம் இலங்கை இலங்கை முஸ்லிம்கள் பற்றி பிரதமர் ரணிலுடன் பேசினாரா? அப்படி பேசியிருந்தால்,பிரதமர் ரணிலால் முன் வைக்கப்பட்ட தீர்வு என்ன என்பதை அமைச்சர் ஹக்கீம் வெளிப்படுத்துவாரா? அமைச்சர் ஹக்கேம் முதலில் தனது அக்கறையை இலங்கை முஸ்லிம்கள் மீது செலுத்த வேண்டும்.

அமைச்சர் ஹக்கீம் மியன்மாரின் தலைவி ஆங் சாங் சுகியை சந்தித்து பேசிய விடயம் முஸ்லிம்களிடையே மிகவும் அதிருப்தியை தோற்றுவித்திருந்தது.அதனை களைந்து கொள்ள அமைச்சர் ஹக்கீம் இதனை கூறியிருக்க வேண்டும் என்பதாகவே நான் கருதுகிறேன்.

 

 

Related posts

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கிய விக்னேஸ்வரன்

wpengine

முஸ்லிம்களின் உடல்களை எரித்தமையானது, தற்போதைய அரசாங்கத்தின் முஸ்லிம் விரோத செயற்பாடு

wpengine

Mahargama Cancer Hospital urgent need a Pet-Ct-Scanner Machine -needed Rs. 200 million -please help

wpengine