அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ராஜபக்ஷ படை குறைப்பு அடிப்படை உரிமை மனு விசாரணை மார்ச் 19 ஆம் திகதி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரைக் குறைக்கும் தீர்மானத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை மார்ச் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

இந்த மனு இன்று (06) ,ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கு அண்மையில் அரசாங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முசலி பிரதேச சபையின் 41 ஆவது அமர்வு முஜிப் ரஹ்மானின் கோரிக்கை

wpengine

வவுனியாவில் பரீட்டை எழுதும் மாணவிக்கு இலக்கம் கொடுத்த ஆசிரியர்

wpengine

சமூகத்தை தனக்காக மட்டும் சொந்தமாக்குதல்

wpengine