பிரதான செய்திகள்

ராஜபக்ஷ அலைபேசி செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுனர் பசில் ராஜபக்ச அலைபேசி செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளார்.


எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த செயலி ஊடாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது.

வீ கென் (V Can) என்ற பெயரில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக சென்று தகவல்களை திரட்டி தற்போதைய அரசாங்கத்தின் குறைகளை கேட்டறிந்து செயலியில் தகவல்கள் உள்ளீடு செய்யப்பட உள்ளது.

இதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறானா ஓர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இணையம் ஊடாக பாலியல் தொழில்! வெளிநாட்டு பெண்கள் கைது.

wpengine

அர்த்தமிழக்கும் அபிலாஷைகள்; அடையாளப்படுத்தலுக்கு எது அவசியம்?

wpengine

மன்னார் மாவட்ட மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை

wpengine