உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ரஹ்மானின் கொழும்பு இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு! சென்னையில் சுவரொட்டி

ஏ.ஆர். ரஹ்மானின் கொழும்பு இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சென்னையில் முருக சேனை எனும் அமைப்பு சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கவிருக்கிறதாம். ஏப்ரல் 23ம் தேதியன்று அந்நிகழ்ச்சி நடக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இலங்கையின் வரலாற்றில் இதுபோன்றதொரு இசைநிகழ்ச்சி நடந்ததில்லை, எனவே இந்த இசை நிகழ்ச்சியைத் தவற விடாதீர்கள் என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ரோஜா படத்தில் இடம்பெற்ற சின்னச்சின்ன ஆசை பாடல் மற்றும் அது உருவான விதம் ஆகியனவற்றைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கு அப்படி விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கிற அதேநேரம் சென்னையில், கொழும்பில் நடக்கும் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்கக்கூடாது என்கிற கோரிக்கையை வைத்து முருக சேனை என்கிற அமைப்பின் சார்பில் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அவற்றில் உலகத் தமிழினம் போற்றும் இசைமேதையே இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இரத்தக்கறை படிந்த சிங்கள அரசோடு கைகோர்ப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Related posts

கறுப்­புப்­பட்டி அணிந்து சபைக்கு சென்ற லாபிர்

wpengine

பொதுபல சேனாவுடனான தனது சகோதரிக்கு உள்ள உறவு தொடர்பில் அஸாத் சாலி விளக்கம் அளிக்க வேண்டும்.

wpengine

ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விமானிகள் வௌியிட்டுள்ள அறிக்கை!

Editor