பிரதான செய்திகள்

ரஹ்மத் நகர் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு

(எம்.ரீ. ஹைதர் அலி)

வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் தியாவட்டவான் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ரஹ்மத் நகர் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் 2016ஆம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து 50,000 ரூபா பெறுமதியான ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் (2016.11.25 – ஆந்திகதி வெள்ளிக்கிழமை) நேற்று வழங்கி வைத்தார்.

மேலும், ரஹ்மத் நகரில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு மலசலகூட வசதி இல்லாமையினாலும், போக்குவரத்துகளை மேற்கொள்ள முடியாமல் வீதிகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அவற்றை புனர்நிர்மானம் செய்து தருமாறும் அக்கிராம மக்கள் சார்பாக ரஹ்மத் நகர் ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவர் என்.எம். ஹயாத்து முஹம்மது கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார். இதனை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு இக்கிராமத்திலுள்ள மக்களின் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்துதருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.unnamed-2

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ. றியாஸ், மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவரும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி, ரஹ்மத் நகர் ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவர் என்.எம். ஹயாத்து முஹம்மது மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள், கேணிநகர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் எஸ்.எம்.எம். ஹூசைன் (ஜே.பீ), நாவலடி மஸ்ஜிதுந்நூர் மற்றும் காவத்தமுனை முபாறக் ஜூம்ஆ பள்ளிவாசலின் நிருவாக சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.unnamed-1

Related posts

மன்னார் மாவட்ட மீனவர்கள் பிரச்சினை! கடற்றொழில் அமைச்சரை சந்தித்த அமைச்சர் றிஷாட் (படங்கள்)

wpengine

40ஆவது இராஜாங்க அமைச்சராக சுசில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

wpengine

வவுனியா மாவட்ட நோயாளிகள் அவதி!

wpengine