உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ரஷ்யா மீதான பொருளாதார தடை! டொனால்ட் டிரம்ப் ஒப்புதல்

ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் கிளாரி கிளிண்டனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இந்தத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு அதிகம் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கிளாரி கிளிண்டனை தோற்கடிக்க ரஷ்ய உளவுத் துறை செயல்பட்டனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அமெரிக்காவின் செனட் சபை கமிட்டி நடத்திய விசாரணையில் உறுதியானது.

இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவிற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டுள்ளார்

Related posts

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உதவுங்கள் – (SLTJ)

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட் உடன் இணைந்து வவுனியாவில் பல்வேறு சேவைகளை செய்துள்ளோம்!

wpengine

கர்நாடகாவின் புதிய முதலமைச்சரின் இரண்டாவது மனைவி குட்டி ராதிகா

wpengine