உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ரஷ்யா- உக்ரைன் ஐ.நா. தீர்மானம்! இலங்கை புறக்கணிப்பு

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் மனிதாபிமான விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கையும் புறக்கணித்தது.

193 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 140 உறுப்பினர்களும், எதிராக 5 பேரும் வாக்களித்தனர்.

இலங்கை மற்றும் இந்திய பிரதிநிதி உட்பட 38 பேர் வாக்களிக்கவில்லை.

193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபை உக்ரைன் மீதான அதன் 11வது அவசரகால சிறப்பு அமர்வை மீண்டும் நேற்று நடத்தியது.

போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்பின் மனிதாபிமான விளைவுகள் பற்றிய வரைவுத் தீர்மானத்தின் மீது இதன்போது வாக்களிப்பு இடம்பெற்றது.  

Related posts

வட மாகாண சபையின் முன்னால் ஆளுநர் மீது தாக்குதல்

wpengine

வில்பத்து வர்த்தமானிக்கு எதிராக கைகோர்க்க தயார் முன்னால் ஜனாதிபதி மஹிந்த

wpengine

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும்! அனைத்து விடயங்களும் பூர்த்தி

wpengine