ரஷ்யப் படைகள் எதிர்வரும் நாட்களில் யுக்ரேனைத் தாக்க உத்தேசித்துள்ளதாக அமெரிக்கா நம்புவதற்கு வலுவான காரணம் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் யுக்ரேனிய தலைநகர் கீவ் குறிவைக்கப்படும் என்று அமெரிக்க உளவுத்துறை கணித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
வெள்ளை மாளிகையில் இருந்து தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய ஜனாதிபதி ஜோ பைடன் இதனை கூறினார். ஆனால், இந்தத் தகவலை ரஷ்யா முழுவதுமாக மறுக்கிறது.
ஆனால், ரஷ்யா “இன்னும் ராஜதந்திரத்தை தேர்ந்தெடுக்க முடியும்” என்றும், “போர் பதற்றத்தை குறைத்து பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு இன்னும் தாமதமாகவில்லை” என்றும் ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய படையினர் சுமார் 169,000 முதல் 190,000 பேர் ”யுக்ரேனிலும் அதற்கு அருகிலும் குவிந்துள்ளனர்” என்றும், கிழக்கு யுக்ரேனில் இருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் இருக்கும் ரஷ்ய ஆதரவு போராளிகளையும் உள்ளடக்கியது என்றும் அமெரிக்காவின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
யுக்ரேனில் இருந்து பிரிந்து சென்ற கிழக்குப் பகுதிகளில் போலியான பதற்றத்தை ஏற்படுத்துவன் மூலம் தாங்கள் தாக்குதல் நடத்தினால், அந்தத் தாக்குதலை ரஷ்யா நியாயப்படுத்த முயற்சிப்பதாக மேற்கத்திய நாடுகள் அஞ்சம் வெளியிட்டுள்ளன.