உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ரஷ்ய தூதுவர் சுட்டுக்கொலை (விடியோ)

துருக்கியிலுள்ள ரஷ்ய நாட்டு தூதுவர் அண்ட்ரிவ் கொலோவ் பொலிஸார் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற சமகால கலை தொடர்பான கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ரஷ்ய தூதுவர்  (19) சென்றிருந்தார். அப்போது நிகழ்ச்சியின் நடுவே திடீரென வந்த நபர், அங்கு மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த ரஷ்ய தூதுவருக்கு பின்னாலிருந்த அந்த நபர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தின் போது, மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும், ரஷ்ய தூதுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பின்னர், ரஷ்ய தூதுவரை சுட்டுக்கொன்ற நபரை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், அந்த நபரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மின் பாவனையாளர்களின் கவனத்திற்கு! உடனடியாக துண்டிக்கப்படும்

wpengine

சமுர்த்தி திட்டம் திறமையான திணைக்களமாக மாற்றப்படும்- ஜனாதிபதி

wpengine

Chinese coronavirus patient at IDH recovered completely – Dr. Jasinghe

wpengine