இந்த ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி வரை ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 59 பேர் வரை உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(07.02.2025) அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.