பிரதான செய்திகள்

ரவி கொண்டு போனதை மீண்டும் மங்களவுடன் இணைக்க தீர்மானம்

தற்போதைக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள லொத்தர் சபைகளை மீண்டும் நிதியமைச்சின் கீழ் கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது அவரது பலத்த வற்புறுத்தல் காரணமாக நிதியமைச்சின் கீழ் இயங்கி வந்த அபிவிருத்தி லொத்தர் மற்றும் தேசிய லொத்தர் சபைகள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் காரணமாக ரவி கருணாநாயக்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து லொத்தர் சபைகள் இரண்டையும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பட்டியலிலிருந்து அகற்றி அவற்றை மீண்டும் நிதியமைச்சின் கீழ் கொண்டு வர அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

தற்போதைய நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்கள சமரவீர செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியா நகர் பகுதி பாடசாலையில் சட்டவிரோத பணம் வசூலிப்பு

wpengine

இன்று ஐ.தே.க.வுடன் சரத் பொன்சேகா

wpengine

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராக முஸ்லிம் கட்சிகள் ஒன்றினைய வேண்டும்.

wpengine