பிரதான செய்திகள்

ரணில்,மைத்திரி ஆட்சியில் மீண்டும் விலை அதிகரிக்கும் நிலைமை

இலங்கையில் எரிபொருள் விலை சூத்திரத்தை செயற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அதற்காக நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலைமை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.

இதனையடுத்து ஈரான் மீது அமெரிக்கா தடை விதிக்க வாய்ப்புகள் உள்ளது.

இதன் காரணமாக எரிபொருளின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஒரு லீற்றர் பெற்ரோல் 20 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசல் 9 ரூபாவினாலும், ஒரு லீற்றர் மண்ணெண்ணை 40 ரூபாவினாலும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஈமெயில் தொழில்நுற்பக் கோளாறு

wpengine

மொட்டு கட்சியினை பலப்படுத்த றிஷாட்டையும் குடும்பத்தையும் பயன்படுத்துகின்றார்கள்.

wpengine

வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கிறார் ஞான­சாரர்

wpengine