பிரதான செய்திகள்

ரணில்,மஹிந்த அணி நாளை சந்திப்பு

அரசாங்கத்திலிருந்து அண்மையில் வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட ரணில் எதிர்ப்பு அணியுடன் இணைந்து எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தீர்மானிக்கவுள்ளார்.

 

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ளது. அதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்படும்.

மேலும் குறித்த அணி கடந்த 23 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

அச் சந்திப்பைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பதனை இலக்காகக்கொண்டு போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அப்போராட்டங்கள் சிலவற்றை கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்தும் மற்றும் சிலவற்றை தனியாகவும் நடத்தவுள்ளதாகவும் அந்த அணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பதவி விலக வேண்டுமாயின் தூதுவர்,தொகுதி பதவி வேண்டும் பூஜித

wpengine

வடக்குச் சமூகத்துடனான கலந்துரையாடல்

wpengine

ரணில்,மைத்திரி மோதல்! ராஜதந்திர தலையீடு

wpengine