பிரதான செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பை காட்டிய! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

மன்னாருக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தம்மை சந்திக்காமல் உதாசீனப்படுத்தி சென்றுவிட்டதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை வெளியிட்டனர்.

மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாவட்ட செயலகக் கட்டிடத் தொகுதியை திறந்து வைக்க நேற்று பிரதமர் அங்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், மன்னார் மாவட்ட செயலகத்திற்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் விழா நிறைவுபெறும் வரை மாவட்ட செயலக பிரதான நுழைவாயில் அருகில் பதாதைகளை ஏந்தியவாறு காத்திருந்தனர்.

எவ்வாறாயினும், பிரதமர் பிரதான வீதிக்குப் பதிலாக பின்புறமாகவுள்ள புனித செபஸ்தியார் பேராலய வீதியூடாக வெளியேறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

ஐந்து அமைச்சர்களுக்கு எதிராக ஊழல், மோசடிகள் முறைப்பாடு

wpengine

நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கு

wpengine

Invitation – Photo Exhibition – 29-31 March 2022 – Palestine Land Day

wpengine