பிரதான செய்திகள்

ரணில் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குழு கூடி தீர்மானம் எடுக்கும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு சம்பந்தமாக தமது பாராளுமன்ற குழு கூடி தீர்மானம் எடுக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். 

நேற்று (31) யாழ்ப்பாணத்தில் வைத்து இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை மீதாக விவாதத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவில் இது தொடர்பில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

அதன்படி எதிர்வரும் 02 அல்லது 03ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு அது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அதற்கு முன்னதாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சில விடயங்கள் குறித்து கலந்துரையாட வேண்டி இருப்பதாகவும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

Related posts

இழுத்து மூடப்பட்ட பொத்துவில் மபாஷா பள்ளிவாசலுக்கு உதவிய ஹிஸ்புல்லா

wpengine

மாகாண சபை தேர்தல் குறித்து! அரசாங்கம் கவனம்

wpengine

செப்டெம்பர் 15ம் திகதிக்கு முன்னர் தேர்தலொன்று நடத்தப்படும் – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Editor